Monday, December 30, 2013

உடல் வலி தீரும் உடற்பயிற்சி

உடல் வலி தீரும் உடற்பயிற்சிபெண்களுக்கு பொதுவாக மூட்டுப்பகுதிகளான இடுப்பு, முதுகு, கால் மூட்டுகளில் தான் அதிகளவில் வலி ஏற்படும். இந்த பகுதிகள் அதிகமாக செயல்படும் போது எலும்பு தேய்மானம் ஏற்பட்டு, ஒன்றுடன் ஒன்று உரசும் போது வலி ஏற்படுகிறது. உரிய பயிற்சிகள் செய்வதன் மூலம் இதைத் தவிர்க்க முடியும்.  

உடல் வலி போக எளிய பயிற்சி உள்ளது. இந்த பயிற்சியை தினமும் வீட்டில் 20 நிமிடம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.இந்த பயிற்சி
செய்ய முதலில் விரிப்பில் இடது பக்கம் ஒருகளிந்து படுக்க வேண்டும். 

இடது கையின் முட்டியைத் தரையில் பதித்து, வலது கையைப் பின்னந்தலையில் மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இடது கையில் தாங்கியபடி உடலை முடிந்தவரை மேலே தூக்க வேண்டும். சில விநாடிகள் அந்த நிலையில் இருந்து விட்டு தொடக்க நிலைக்கு வரவும். 

இவ்வாறு இந்த பயிற்சியை 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பபித்தில் 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் உங்களால் முடிந்த அளவு எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம். இப்போது கைகளை மாற்றி வலது பக்கம் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடல் முழுவதும் உள்ள வலிகள் குறையும். சுறுசுறுப்பாகவும் உணர முடியும்.

No comments: