Monday, December 30, 2013

முதுகை வலுபடுத்தும் பயிற்சி

முதுகை வலுபடுத்தும் பயிற்சிஇப்போதுள்ள காலகட்டத்தில் 10-ல் 8 பேர் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். முதுகு வலிக்கு ஜிம்மில் பல விதமான உடற்பயிற்சிகள் உள்ளன. ஆனால் அவ்வாறு ஜிம்முக்கு செல்ல முடியாதவர்களுக்கு என்று சில குறிப்பிட்ட பயிற்சிகள் உள்ளன.அவற்றுள் மிக முக்கியமானது இந்த பயிற்சி. அவ்வாறு முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். மேலும் இந்த பயிற்சி முதலில் செய்யும் போது சற்று கடினமாக
இருக்கும். 

இந்த பயிற்சி செய்முறை.. முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி குப்புற படுக்கவும். பின்னர் கைகளை தலைக்கு மேல் நீட்டி கும்பிட்ட நிலையில் வைத்து கால்களை பின்புறமாக மேல் நோக்கி தூக்க வேண்டும். 

எவ்வளவு தூரம் தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் தூக்க வேண்டும் (படத்தில் உள்ளபடி). இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்க வரவும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். 

ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் போது முதுகு வலி அதிகமாக இருக்கும். செய்ய செய்ய படிப்படியாக வலி குறைவதை காணலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தாலே வலி சற்று குறைந்திருப்பதை காணலாம். வலி குறைந்தாலும் தொடர்ந்து 3 மாதம் செய்து வர வேண்டும். 

No comments: