உடல் வலிமையாகவும், கவர்ச்சியாகவும் இருக்க தசைகள் மிக முக்கியம். அனைத்து ஆண்களுக்கும் தசைகளை மேம்படுத்த வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். சினிமா, சீரியல் போன்ற அனைத்து பொழுது போக்குகளிலும் தசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்டப்படுகின்றது. இதற்கென பல பயிற்சி கூடங்கள் பரவலாக இருக்கின்றன.
பயிற்சி கூடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியாகவே உடற்பயிற்சி செய்பவர்களும்
உண்டு. அவ்வாறு செய்பவர்கள் அதற்கென இருக்கும் நிபுணர்களின் ஆலோசனைப் படி செய்வது மிக மிக அவசியம். அதற்காக நிலைகளை அதன் இலக்கணப்படி செய்தால் தான் பலன் அடைய முடியும்.
ஸ்குவாட்ஸ் :
இது பாடி பில்டிங் செய்வதற்கான ஒரு வித பயிற்சி. இதை தொடர்ந்து செய்வதால் உடலுக்கு வலிமை சேர்த்து, தசைகளை சேகரித்து ஆரோக்கியமான, கட்டுக்கோப்பான உடலை பெற முடியும்.
டெட் லிப்ட்ஸ் :
இவை ஒருவித தசைகள் பெற உதவும் பயிற்சி. இதனை வெயிட் லிப்டிங் செய்வது போன்று தொடர்ந்து செய்து வந்தால், அதிக பலன் அடைய முடியும்.
கார்டியோ :
கார்டியோ மிக மிக அவசியம். இவற்றை தினமும் செய்வதால் மிக அதிகமாக தசைகள் தோன்றாமல் பார்த்து கொள்ள முடியும். அளவுடன் இருந்தால் பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும்.
பாடி பில்டிங் :
அதிக நேரம் எடுத்து கொள்ளும் பாடி பில்டிங் செய்யும் போது நேரம் போகின்றது என்று கவலை கொள்ளக் கூடாது. இதற்கு அதிக நேரம் தான் ஆகும். பொறுமையாகவும், நிதானமாகவும், அடிப்படை செயல் கூறுகளுடனும் இவற்றை செய்ய வேண்டும். அதற்கு அதிக நேரம் ஒதுக்கினால் தான் சிறப்பாக செய்ய முடியும்.
கலவை உடற்பயிற்சி :
ஒன்றுக்கு மேற்பட்ட உடற்பயிற்சியை செய்வது தான் கலவை பயிற்சி. கலவை பயிற்சிகள் தசை உருவாக்கத்திற்கு உதவுகின்றது. இந்த பயிற்சிகள் எடைகள் மற்றும் கேபிள்கள் கொண்டு செய்யப்படுகின்றது.
காலையில் பயிற்சி செய்யவும் :
தசைகளின் பயிற்சிக்கு அதிகாலை பொழுதே சிறந்த நேரமாகும். வெறும் வயிற்றுடன் காலையில் பயிற்சி செய்தால், தசைகளுக்கு தேவையான பலத்தை அளிக்க முடியும். உடல் வலிமையை அதிகரிப்பது என்பது ஒரு சராசரி மனிதனுக்கு தன்னம்பிக்கை எனும் ஆர்வத்தை தன்னகத்தே தூண்டுவதாக அமையும்.
சரியான உணவு, முறையான பயிற்சி, எல்லாவற்றிற்கும் மேல் மனஅழுத்தம் அல்லாத வாழ்க்கை இவையாவும் உடல் வலிமையை கூட்டும் மூலாதாரமாகும். ஆக மொத்தத்தில் தசைகளை வலுப்படுத்த தேவையான மேற்கூறப்பட்ட வழிமுறைகளை சரியாக செய்து வந்தால் நாமும் ஆணழகன் தான்.

No comments:
Post a Comment