கால்களுக்கு வலிமை தரும் பயிற்சிகளில் இந்த பயிற்சி மிகவும் சிறப்புடையது. இந்த பயிற்சி செய்ய ஜிம்முக்கு போக வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. இந்த பயிற்சி கால்களுக்கு நல்ல வலிமை தருகிறது. மேலும் கால் தொடையில் உள்ள அதிகமான சதைப்பகுதியை குறைக்கவும் உதவுகிறது. இந்த பயிற்சி செய்ய சுவற்றின் அருகில் நிற்கவும். பின்னர் உங்களுடைய முதுகை சுவற்றுக்கு நேராக நிறுத்தி வைத்து விட்டு, தொடைப்பகுதியை தரைக்கு இணையாக கொண்டு வரவும்.
பின்னர், முழங்கால்களை தரைக்கு 90 டிகிரி கோணத்தில்
வரும் வகையில் கொண்டு வந்து அமரவும். நீங்கள் இதனை செய்வதற்கு ஒரு நாற்காலியை உங்களுக்கு முன் வைத்து செய்தால் நிலைப்புத்தன்மை கிடைக்கும்.
மேலும், இதை செய்யும் போது உங்களுடைய முழங்கால் பாதத்தைப் பார்த்து திரும்பிக் கொள்ளாமலிருப்பதை உறுதி செய்யவும். இந்த நிலையில் 30 வினாடிகள் இருந்து விட்டு, பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த பயிற்சியை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment