Showing posts with label தகவல்கள். Show all posts
Showing posts with label தகவல்கள். Show all posts

Wednesday, November 13, 2013

வங்கிகள் வழங்கும் பலவிதமான ஆன் லைன் சேவைகள்…

பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கியிலிரு ந்து பணம் எடுப்பதே ஒரு (பரபரப்பான) அனுபவமாக இருக்கும்! வங்கிக்குப் போய், டோக்கன் வாங்கி, நம் வரிசை எண் வருகிற வரை காத்துக்கிடந்து, பணத்தைப் பெற்று, வீட்டுக்கு வருவதற்குள், ஒரு மணி நேரம் முதல் அரை நாள் போய்விடும். ஆனால், ஏ. டி. எம். வசதி வந்தபிறகு இன்றைக்கு ஒன்றிரண்டு நிமிடங்களில் பணத்தை எடுத்துவிட முடிகிறது. இன்றைக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேலே பணம் எடுக்கவேண்டும் என்றால் மட்டுமே வங்கிக்குச் செல்கிறோம்.

ஏ.டி.எம். வசதி மாதிரி, இன்று வங்கி கள் வழங்கும் பலவிதமான ஆன்லைன் வசதிகளைப் பயன்படுத்தினால், உங்கள் காரியங்களை இருந்த இடத்தில் இருந்தபடி எளிதாகச் செய்து முடிக்கலாம். இதனால் நேரமும் மிச்சம்; அலைச்சலும் இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் பெருமளவிலான பணத்தை மிச்சப்படுத்திச் சேமிக்க வும் செய்யலாம்.
அட, அப்படியா! வங்கிகள் வழங்கும் வெவ்வேறுவிதமான ஆன் லைன் வசதிகள் என்னென்ன என்று  தானே கேட்கிறீர்கள்? ஒவ்வொன்றை பற்றியும் விளக்கமாகச் சொல்கிறேன், கேளுங்கள்.
பலவிதமான ஆன்லைன் வங்கிச்சேவைகளைப் பெறுவதற்கு, ஆன்லைன் வசதி பெற்றிருப்பது அவசியம். ஆகவே, நீங்கள் ஏற்கெனவே வங்கியில் கணக்கு வைத்திருந்து உங்களிடம் ஆன்லைன் பேங்கிங் / இன்டர்நெட் பேங்கிங் வசதி இல்லையென்றால், உடனடியா க உங்கள் வங்கி மேலாளரை அணுகி ஆன்லைன் வசதிக்கு உண் டான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள்.

Monday, October 7, 2013

ரூபாய் நோட்டுகளை மதிப்போம்

R.B.I உத்தரவின் படி வருகின்ற ஜனவரி முதல் தேதி முதல் ..இந்த ரூபாய் நோட்டுகளில் கவிதை எழுதுவது ,கையெழுத்து போட்டு பார்ப்பது,அட்ரெஸ் எழுதுவது ,கணக்கு போட்டு பார்ப்பது , அந்த மாதிரியான ரூபாய் நோட்டுகளை எந்த பேங்கும் ஏற்க்காது ..அதனால் நீங்களும் எழுதாதீங்க ,எழுதியிருக்கும் நோட்டுகளை வாங்காதீங்க ...இதனால கவர்ண்ட்மெண்ட்க்கு வருடத்திற்கு 2,638 கோடி இழப்பு ஏற்ப்படுகிறதாம் ....

இனி ரூபாய் நோட்டுகளை மதிப்போம் ,கிருக்கல்களை தவிற்ப்போம் ..

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..? கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள். சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர்

Thursday, September 19, 2013

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பெறுவது எப்படி?

நம்மில் நிறைய பேர் ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதிலிருக்கும் பல்வேறு வசதிகளை நாம் அறிவதில்லை.இன்றைய பதிவில் உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் மொபைலில் GPRS PACK போட்டிருந்தால் நல்லது. முதலில் உங்கள் மொபைலில் < MBSREG> < உங்கள் மொபைல் கம்பனி> <மொபைல் மாடல்> டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.(எடுத்துக்காட்டு 
MBSREG SAMSUNG 6102 ).உடனே உங்கள் மொபைலுக்கு ஒரு USER ID யும் ஒரு பாஸ்வேர்டும் கிடைக்கும்.அதைக் குறித்து வைத்துக்கொள்ளவும். SMSக்கு 3 ரூபாய் செலவாகும் ,அதையும் சொல்லிவிடுகிறேன்.

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் GOOGLE PLAY STOREல் சென்று

Friday, September 13, 2013

உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர...



  • அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே...

    ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம். துண்டு விழும் 532 ரூபாயை அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக அளித்து வருகிறது. ஆனால் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலிருந்து நீங்கள் விற்பனையாளரிடம் முழுத் தொகையையும் கொடுத்துத்தான் சிலிண்டரை வாங்க முடியும். இதுவரை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் இனி நேரடியாக உங்களிடமே கொடுக்கப்படும். ஆனால் அது உங்கள் கையில் ரொக்கமாகக் கொடுக்கப்பட மாட்டாது. உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்

என்னென்ன காய்கறி என்ன பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது.

2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்



3. முருங்கைக்காய் : நல்ல முருங்கை முறுக்கினால் வளைந்து கொடுக்கும். முற்றவில்லை என்று அர்த்தம்

Monday, September 9, 2013

பெருந்தலைவர் காமராஜ்

காமராஜரின் 111வது பிறந்த நாளையொட்டி 

அவரைப் பற்றிய 111 தகவல்கள்


1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

2.
கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

3.
காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4.
காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.. 

Friday, September 6, 2013

ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாட்கள்

மற்ற நாடுகளில்,

சீனா -10 Sept
இந்தியா - 5 Sept
பிரேசில் - 15 Oct
ஜெர்மனி - 5 Oct
இலங்கை - 6 Oct
மலேசியா - 16 May
நியுசிலாந்து - 29 Oct
பாகிஸ்தான் - 5 Oct

Wednesday, September 4, 2013

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?


இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

Tuesday, September 3, 2013

இரயிலில் உணவு சரியில்லையா?

ரயிலில் விற்கப்படும் உணவு சரியில்லையா? இது பற்றி, புகார் தெரிவிக்க 1800111321 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட தூர ரயில்களில் கேட்டரிங் சர்வீஸ் உள்ளது. இது பயணிகளுக்கு வசதியாக இருந்தாலும், ரயிலில் விற்கப்படும் உணவு நன்றாக இருப்பதில்லை என்றும், அளவு குறைவாக உள்ளது என்றும் அடிக்கடி புகார்கள் வருகின்றன.

ஆசிரியர் தினம் மற்றும் அதன் சிறப்பு, கொண்டாட்டம், வாழ்த்துக்கள் போன்றவற்றை பற்றிய சிறப்பு கட்டுரை.


ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

Monday, September 2, 2013

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?


ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

Android சாதனத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள்!!!

      ஒவ்வொரு Android சாதனத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய பயனுள்ள ஒரு மென்பொருள் இது!


 
உங்கள் Android சாதனத்தில் அடிக்கடி Battery Low பிரச்சினை  ஏற்படுகின்றதா? 

         இதனை நிவர்த்தி செய்ய எண்ணுகிறீர்களா?
 அப்படி எனில் உங்கள் Android சாதனத்தில் இருக்க வேண்டியது Battery Doctorஆகும்.
          இது உங்கள்  Android சாதனத்திலிருந்து வீணே செலவாகும் சக்தியை சேமித்து நீண்ட நேர உழைப்பை பெற்றுத்தர பெரிதும் உதவுகின்றது. இது 30 மில்லியன் பாவனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ள முற்றிலும் இலவசமான மென்பொருளாகும்.

ECS 9.0 & 9.1 E-payroll Version Software & Manual



              அரசு கருவூலம் தற்போது 9.0 வெர்சன் சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. அதற்கான சாப்ட்வேரை நாம் இங்கு வழங்கியுள்ளோம். 

              மேலும் விரைவில் 9.1 சாப்ட்வேரை இணையம் வழியாகபயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கான பயன்படுத்தும் முறையையும் நாம் இங்கு வழங்கியுள்ளோம்..

குறிப்பு - புதியதாக தங்கள் பள்ளியில் அனைத்து சாப்ட்வேர்களையும் பயன்படுத்தி சம்பள பில் தயாரிக்க நினைக்கும் பள்ளிகளுக்கானஒருங்கிணைந்த  சாப்ட்வேர் மற்றும் மேனுவல்களையும் நாம் இங்கு வழங்கியுள்ளோம்.

Sunday, August 25, 2013

தேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?



நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம்.
ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன தெரியுமா?


இந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெற எண்ணற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது.

இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக்காணும்போதும் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 

Friday, July 26, 2013

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...




நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு , கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..

அந்த கலர்களின் அர்த்தம் 

பச்சை
- இயற்கை
ப்ளூ
- இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு -
இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .


இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் . ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்.

3 Man Commisssion - GO | மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.


>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.

>தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.

>மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.

click here to download the GO - spell 1 

click here to download the GO - spell2 

Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013


3 நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 237ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு 01.01.2006 தேதி முதல் 31.03.2013 வரை (பணப்பலனின்றி) சம்பளத்தில் கணக்கிடப்பட்டு அதற்கான பணப்பலன் 01.04.2013 முதல் 3% என்று வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் தற்போது 3%+3% ஆக மாற்றி வழங்கப்படும்.

Sunday, July 14, 2013

கடன் பெறாத நாடு 
உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்கபோகிறோம்.

Wednesday, July 10, 2013

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! !

உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற....

அழுத்துங்கள்-

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! !

உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற....

அழுத்துங்கள்-

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#