Saturday, November 16, 2013

மிளகாய் குழம்பு

பச்சை மிளகாய்குடை மிளகாய்தக்காளி
தேவையான பொருள்கள்:
  1. பச்சை மிளகாய் = 10
  2. குடை மிளகாய் = 2
  3. சின்ன வெங்காயம் = 12
  4. தக்காளி = 1
  5. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  6. புளி = சிறிய உருண்டை
  7. வெந்தயம் = 1 ஸ்பூன்
  8. சீரகம் = 1 ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாய்  சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.
  • பிறகு புளியை கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான “மிளகாய் குழம்பு” தயார். இதை அனைத்து விதமான சாததோடும் பரிமாற சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • மிளகாயில் அதிகமாக வைட்டமின் “சி” உள்ளது.  இது உடலுக்கு வெப்பத்தை தருகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க செய்கிறது.  மிளகாயை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்தினால் இது பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • குடை மிளகாயை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். குடை மிளகாயில் கொலஸ்ட்ரால், சோடியம் மற்றும் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாக இருக்கிறது.
  • கண் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கூந்தல் பிரச்சனைகள் ஆகியவை வராமல் தடுக்கும். மேலும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் “ஏ”, வைட்டமின் “பி”, வைட்டமின் “சி” மற்றும்  வைட்டமின் “ஈ” போன்றவை காணப்படுகிறது.
மிளகாயை சரியான அளவில் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி வாழலாம்.

No comments: