தேவையான பொருள்கள்:
- கோதுமை மாவு = 250 கிராம்
- பாசிப்பருப்பு = 1 ஸ்பூன்
- கடலை பருப்பு = 1ஸ்பூன்
- மிளகுத்தூள் = அரை ஸ்பூன்
- சீரகத்தூள் = அரை ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும். இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு கலந்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
- கோதுமை மாவை பிசைந்து பூரியாக செய்து வதக்கிய விழுதை சிறிதளவு எடுத்து வைத்து மூடி வைத்து பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான “பருப்பு பூரி” தயார்.
மருத்துவ குணங்கள்:
- பாசிப்பருப்பில் பொட்டாசியம் , கால்சியம், பாஸ்பரஸ், ஸ்டார்ச், கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- தாதுப்பொருள், நார்ச்சத்து நிறைந்துள்ளது. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. சருமத்தை பாதுகாக்கிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.
- உடல் வெப்பத்தை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குறைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு.
No comments:
Post a Comment