Saturday, November 16, 2013

முருங்கைக்காய் சூப்

முருங்கைக்காய்வெங்காயம்பயத்தம் பருப்பு
தேவையான பொருள்கள்:
  1. முருங்கைக்காய் = 20 கிராம்
  2. பயத்தம் பருப்பு = 25 கிராம்
  3. வெங்காயம் = 4
  4. தக்காளி = 2
  5. மிளகு = 5 கிராம்
  6. பட்டை = 1
  7. கிராம்பு = 1
  8. தேங்காய் பால் = 100 மி.லி
  9. நெய் = 1 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் முருங்கைக்காயை லேசாக வதக்கி இறக்கி தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போடவும். பருப்பு வெந்ததும் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
  • பிறகு வாணலியில் சிறிது நெய்யை விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி பிறகு பட்டை, கிராம்பு போட்டு கிளறி தக்காளி போட்டு வதக்கி பிறகு வேக வைத்த முருங்கைக்காய் கலவையை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி கொதிக்க வைத்து வடிக்கட்டி சூடாக பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான “முருங்கைக்காய் சூப்” தயார்.

மருத்துவ குணங்கள்:
  • முருங்கைக்காயில் வைட்டமின்  A, வைட்டமின் C, கால்சியம்,  பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது.
  • உயர் இரத்த அழுத்தம், விந்து விருத்தி, வாதம் போன்றவவை குறையும். மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும்.
  • தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும். விந்து குறைபாட்டை குறைத்து விந்து உற்பத்தியை அதிகரிக்கும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயின்றி வாழ்வோம்.

No comments: