Saturday, November 16, 2013

சுண்டைக்காய் புளி கறி

புளிசுண்டைக்காய்சின்ன வெங்காயம்
தேவையான பொருள்கள்:
  1. சுண்டைக்காய் = கால் கிலோ
  2. புளி = சிறிய எலுமிச்சை அளவு
  3. சின்ன வெங்காயம் = 50 கிராம்
  4. மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
  5. தனியா பொடி = அரை ஸ்பூன்
  6. ஓமம் = அரை ஸ்பூன்
  7. வெல்லம் = சிறிதளவு
  8. எண்ணெய் = அரை கரண்டி
  9. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • சுண்டைக்காயை தட்டி சிறிது நேரம் ஊற விட்ட பின் தேய்த்து விதை போகும் படி கழுவி நீர் வடிய விடவும். சின்ன வெங்காயம் உரித்து முழுதாகவே வைத்துக் கொள்ளவும். ஓமத்தை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
  • புளியை மிகவும் கெட்டியாக அரை கப் நீரில் கரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடி செய்யவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்த பின் சின்ன வெங்காயம், சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் உப்பு, கரைத்து வைத்துள்ள புளி சேர்த்து மூடி 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • முதல் 5 நிமிடம் திறந்து வைத்து கொதிக்க விட வேண்டும். அத்தோடு கை விடாமல் கிளறி விடவும் வேண்டும்.
  • இது ஓரளவு சுருண்டு வற்றத் தொடங்கும் போது வெல்லப்பொடியை கலந்து அதன் மணம் போகும் வரை கிளறவும். கடைசியாக ஓமம் பொடித்ததை சேர்த்து கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான சுண்டைக்காய் புளி கறி தயார். இதை ரைஸ் குறிப்பாக சாம்பார், தயிர் சாதத்துடனும்,சப்பாத்தி, பரோட்டா, லுச்சி போன்றவற்றோடு பரிமாறலாம். இதை நீர் பதம் இல்லாமல் சுண்ட வைத்து விட்டால் 2 முதல் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • சுண்டைக்காயில் கிளைகோசைட்ஸ் அதிகமாக இருப்பதால் இது செரிமானம், இருமல், உடல் குளிர்ச்சி, வலி நிவாரணி, கல்லீரல் சம்பத்தப்பட்ட நோய்களை குறைக்கும்.
  • சுண்டைக்காய் புளி கறி மிகவும் ஆரோக்கியமானது.

No comments: