Saturday, November 16, 2013

தயிர் குருமா

தயிர்கேரட்ஜாதிக்காய் பொடி
தேவையான பொருள்கள்:
  1. தயிர் = 2 கப்
  2. தேங்காய் = 1 மூடி
  3. பச்சை மிளகாய் = 6
  4. கசகசா = 2 ஸ்பூன்
  5. துவரம் பருப்பு = 3 ஸ்பூன்
  6. மிளகு = 1 ஸ்பூன்
  7. சீரகம் = அரை ஸ்பூன்
  8. கேரட் = 100 கிராம்
  9. பீன்ஸ் = 100 கிராம்
  10. இஞ்சி பூண்டு விழுது = 2 ஸ்பூன்
  11. பட்டை = 2
  12. கிராம்பு = 3
  13. ஏலக்காய் = 3
  14. மிளகாய் வற்றல் = 3
  15. எலுமிச்சை சாறு = 1 ஸ்பூன்
  16. ஜாதிக்காய் பொடி = கால் ஸ்பூன்
  17. எண்ணெய் = 4 ஸ்பூன்
  18. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • தயிரை கடைந்து உப்பு போட்டு வைக்கவும். தேங்காயை, பச்சை மிளகாயை ஊற வைத்த துவரம் பருப்பு, மிளகு, சீரகம் அரைக்கவும். பீன்ஸையும், கேரட்டையும் விரல் பருமனில் ஓரங்குல துண்டுகளாக நறுக்கவும்.
  • பாதி எண்ணெயில் பீன்ஸ், கேரட்டை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் மீதி எண்ணெயில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். எலுமிச்சை சாறு, ஜாதிக்காய் பொடி, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். கடைந்த தயிரை சேர்க்கவும்.
சுவையான தயிர் குருமா தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, நூடுல்ஸ், இட்லி, தோசை போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
  • தயிர் ஊட்டச்சத்து மிக்கது மற்றும் கொழுப்பை குறைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறதுநோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. வேனிற் கட்டி குறைகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் பலம் பெறும். உயர் இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது.
  • இந்த தயிர் குருமா மிகவும் உடலுக்கு ஆரோக்கியமானது.

No comments: