தேவையான பொருள்கள்:
- துவரம் பருப்பு = 100 கிராம்
- பயத்தம் பருப்பு = 100 கிராம்
- இஞ்சி = காலங்குலம்
- மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- வெங்காயம் = 2
- தக்காளி = 100 கிராம்
- புளி = அரை எலுமிச்சை அளவு
- வெல்லம் = சிறிதளவு
- கடுகு = அரை ஸ்பூன்
- சீரகம் = அரை ஸ்பூன்
- கடலை பருப்பு = 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
- எண்ணெய் = 2 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் தோல் நீக்கித் தட்டிய இஞ்சியையும் சேர்த்துக் குக்கரில் வைத்து வேக விட்டுக் கடைந்து கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். வெங்காயத்தையும், தக்காளியையும் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- குக்கரில் வெந்த பருப்போடு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வெங்காயம், தக்காளி சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
- நெடி அடங்கியதும் கரைத்த புளி, வெல்லம், உப்பு சேர்த்து மீண்டும் மூடி கொதிக்க விடவும். புளி வாசனை அடங்கியதும் எண்ணெயில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான மைசூர் சாம்பார் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, இட்லி, தோசை, அடை, பொங்கல் போன்வற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
- துவரம் பருப்பில் புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச் அதிகமாக இருப்பதால் இவை செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.
- இவை சுவையான மற்றும் ஆரோக்கியமான சாம்பார்.
No comments:
Post a Comment