தேவையான பொருள்கள்:
- வாழைப்பூ = 1
- சின்ன வெங்காயம் = 6
- தேங்காய் பால் = 1 கப்
- சீரகம் = 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் = சிறிதளவு
- மிளகாய் தூள் = தேவைக்கேற்ப
- புளி = சிறிய உருண்டை
- எண்ணெய் = தேவையான அளவு
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.
- புளியை கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம் போட்டு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- நன்றாக கொதித்ததும் வேக வைத்த வாழைப்பூ மற்றும் தேங்காய் பால் கலந்து கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
சூடான, ஆரோக்கியமான வாழைப்பூ குழம்பு தயார். இதை சாதம், சப்பாத்தி, இட்லி மற்றும் தோசை ஆகியவற்றோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
- வாழைப்பூ குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது.
- பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும். ஆண்களுக்கு விந்துவை விருத்தி செய்யும்.
- வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.
- இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
- மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். உடல் எடை குறையும். எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.
No comments:
Post a Comment