தேவையான பொருள்கள்:
- உருளைக்கிழங்கு = 2
- பாசிப்பருப்பு = 1 கப்
- வெங்காயம் = 1
- பச்சை மிளகாய் =2
- இஞ்சி = சிறிய துண்டு
- சீரகம் = 1ஸ்பூன்
- பெருங்காயத்தூள் = 1 சிட்டிகை
- கொத்தமல்லி இலை = சிறிதளவு
- எண்ணெய் =தேவையான அளவு
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சியை துருவி வைத்து கொள்ளவும். கொத்தமல்லி இலையை நறுக்கி கொள்ளவும்.
- பாசிப்பருப்பை நன்றாக ஊற வைத்து கழுவி அரைத்து வைத்து கொள்ளவும்.
- அரைத்த பாசிப்பருப்பு, மசிந்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பதமாக கலந்து சிறிய உருண்டையாக உருட்டி வைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
சுவையான “உருளைக்கிழங்கு போண்டா” தயார். இந்த உருளைக்கிழங்கு போண்டாவை மாலை நேரத்தில் புதினா சட்னி, தேங்காய் சட்னியோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
- உருளைக்கிழங்குகளில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
- உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
உடலுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயின்றி வாழ்வோம்.
No comments:
Post a Comment