Saturday, November 16, 2013

அரைக்கீரை குழம்பு

பூண்டுஅரைக்கீரைபச்சை மிளகாய்
தேவையான பொருள்கள்:
  1. அரைக்கீரை = 1 கட்டு
  2. பச்சை மிளகாய் = 3
  3. பூண்டு = 5 பல்
  4. தக்காளி = 4
  5. சின்ன வெங்காயம் = 5
  6. கடுகு = அரை ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  8. சீரகம் = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • அரைக்கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • குக்கரில் கீரை, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து மத்தினால் நன்கு கடையவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கடைந்து வைத்த கீரை கலவையை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான “அரைக்கீரை குழம்பு” தயார். இதை சாதத்தோடு பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:
  • அரைக்கீரையில் தாதுக்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் மஞ்சள் காமாலை, புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
  • அரைக்கீரை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு பாதிப்பு குறையும். ஜலதோஷம், உடல் சூடு, சளி, சுரம், இருமல், பித்தம் ஆகியவற்றை குறைக்கும்.
  • கீரையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
  • பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும். இரத்த உற்பத்தி அதிகரிக்கும். பசியின்மை குறையும். கூந்தல் நன்கு அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும். இளநரை வராமல் தடுக்கும்.

No comments: