தேவையான பொருள்கள்:
- மீல்மேக்கர் = 1 கப்
- வெங்காயம் = 1
- தக்காளி = 3
- இஞ்சி = சிறிய துண்டு
- பூண்டு = 5 பல்
- சீரகம் = 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் = தேவையான அளவு
- கடுகு = அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
- பெருஞ்சீரகம் = 1 ஸ்பூன்
- தேங்காய் பால் = அரை கப்
- கொத்தமல்லி = சிறிதளவு
- கறிவேப்பிலை = சிறிதளவு
- எண்ணெய் = 2 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- மீல்மேக்கரை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு 15 நிமிடம் வைத்திருந்து நன்றாக பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- பிறகு கொதிக்கும் நீரில் தக்காளியை 2 நிமிடங்கள் போட்டு எடுத்து தோலுரித்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.
- இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
- பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறி பிறகு தக்காளி சேர்த்து கிளறவும்.
- நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது மீல் மேக்கரை போட்டு வதக்கவும். தேங்காய் பால் ஊற்றி பொடித்து வைத்த சீரகத்தை போட்டு கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான “மீல்மேக்கர் குழம்பு” தயார். இதை சாதம், சப்பாத்தி, பூரி, ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றோடு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
- மீல்மேக்கர் அதிக அளவு புரதச்சத்து மிக்கது. மீல்மேக்கரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், மார்பக புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
- எலும்புகளுக்கு பலத்தை அதிகரிக்கிறது. கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக காணப்படுகிறது.
- பற்களை பலப்படுத்தும். தினசரி உணவில் மீல்மேக்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.
- குழந்தைகள் மற்றும் பெண்களுகள் சாப்பிட கூடிய ஆரோக்கியமான உணவு மீல்மேக்கர்.
No comments:
Post a Comment