Saturday, November 16, 2013

முருங்கைக்காய் சாம்பார்

உளுத்தம் பருப்புமுருங்கைக்காய்துவரம்பருப்பு
  1. முருங்கைக்காய்= 4
  2. துவரம் பருப்பு = 200 கிராம்
  3. மஞ்சள் பொடி = சிறிதளவு
  4. பெருங்காயம் = சிறிதளவு
  5. வெங்காயம் = 2
  6. பச்சை மிளகாய் = 3
  7. மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
  8. தனியா பொடி = அரை ஸ்பூன்
  9. புளி = எலுமிச்சை அளவு
  10. கடுகு = அரை ஸ்பூன்
  11. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  12. மிளகாய் வற்றல் = 2
  13. எண்ணெய் = 2 ஸ்பூன்
  14. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்துக் குழைய வேக விட்டுக் கொள்ளவும். முருங்கைக்காயை இரண்டங்குலத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
  • கரைத்த புளியில் பச்சை மிளகாய், வெங்காயம், முருங்கைக்காய் சேர்த்து உப்பு போட்டு மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
  • கொதித்து பொடி வாசனை அடங்கியதும் கடைந்த பருப்பை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான முருங்கைக்காய் சாம்பார் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, உப்புமா, பொங்கல், அடை, இட்லி, தோசை போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
  • முருங்கைக்காயில் வைட்டமின்  A, வைட்டமின் C, கால்சியம்,  பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம், தாது விருத்தி, வாதம் போன்றவவை குறையும்.
  • மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும்.

No comments: