Saturday, November 16, 2013

வாழைக்காய் வடை

வாழைக்காய்சோம்புகடலை மாவு
தேவையான பொருள்கள்:
  1. வாழைக்காய் = 2
  2. கடலை மாவு = 3 ஸ்பூன்
  3. சோம்பு = 1 ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம் = 100 கிராம்
  5. பச்சை மிளகாய் = 4
  6. இஞ்சி = காலங்குலம்
  7. எண்ணெய் =150 கிராம்
  8. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • வாழைக்காயை 2 துண்டுகளாக நறுக்கி குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 1 நிமிடம் வைத்து எடுக்கவும். பிறகு இதை தோல் உரித்துக் கொள்ளவும்.
  • சோம்பை பொடி செய்யவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் கலந்து சிறிது நீர் விட்டுப் பிசைந்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் கொண்டு காய்ந்ததும் இந்த வாழைக்காய் கலவையை வடை போல தட்டி போட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
சுவையான வாழைக்காய் வடை தயார். இதை எல்லா விதமான ரைஸோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
  • வாழைக்காய் குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கல் குறையும்.
  • உடல் எடை, இரத்த அழுத்தம், இரத்த சோகை ஆகியவை குறையும். எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.

No comments: