- புளி = எலுமிச்சை அளவு
- தேங்காய் துருவல் = 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் = 2
- மிளகாய் பொடி = ஒன்றரை ஸ்பூன்
- தனியா பொடி = 3 ஸ்பூன்
- சர்க்கரை = 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- வெந்தயம் = அரை ஸ்பூன்
- பட்டை = 2
- எண்ணெய் = 4 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- புளியைத் தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயையும், தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்துக் குழம்பை விட்டு மூடி கொதிக்க விடவும். இடைஇடையே கிளறி விடவும்.
- பொடி வாசனை அடங்கியதும் சர்க்கரையைச் சேர்த்து மேலும் சிறிது கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி தூவவும்.
சுவையான புளிக்குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, பிரட், இட்லி, தோசை, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
- புளியில் கலோரி, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், ஃபைபர், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2 ஆகியவை காணப்படுகிறது.
- மலச்சிக்கல் மற்றும் காய்ச்சல் குறையும். பித்தம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக்கடுப்பு, வெள்ளைப்படுதல், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். மேலும் வீக்கம், தொண்டை புண், அம்மை நோய் ஆகியவை குறையும்.
No comments:
Post a Comment