தேவையான பொருள்கள்:
- புளிச்சக்கீரை = 1 கட்டு
- புளி = எலுமிச்சை அளவு
- மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
- தனியா பொடி = 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- பச்சை மிளகாய் = 4
- மிளகாய் வற்றல் = 2
- கசகசா = 2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
- தக்காளி = 4
- பனீர் = 100 கிராம்
- வெந்தயம் = அரை ஸ்பூன்
- எண்ணெய் = கால் கப்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- புளியை தேவையான தண்னீரில் கரைத்து வடிகட்டவும். புளிச்சக்கீரையை ஆய்ந்து கொள்ளவும். சிறிது எண்ணெயில் கசகசாவை வறுத்து அதனோடு தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து கீரை, தக்காளி சேர்த்து வதக்கவும். வதக்கிய எல்லாவரற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து புளித் தண்ணீரில் கலக்கவும். உப்பு சேர்க்கவும்.
- குழம்பில் மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, சேர்க்கவும். பனீரை விரல் போல் இரண்டங்குல நீளத்தில் நறுக்கி தண்ணீரில் அலசி விட்டுப் பிழிந்து சிறிது எண்ணெயில் சிவக்க வறுக்கவும்.
- வாணலியில் மீதி எண்ணெயைக் காய விட்டு வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து குழம்பைச் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
- கொதித்து பொடி வாசனை அடங்கியதும் பொரித்து வைத்துள்ள பனீரை சேர்த்துக் கிளறி இறக்கி கொத்தமல்லி தூவவும்.
சுவையான புளிச்சக்கீரை பனீர் மசாலா குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, அடை, ஆப்பம், பொங்கல், நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
- புளிச்சக்கீரையில் வைட்டமின் C மற்றும் தாது உப்புக்கள் உள்ளது. குளுக்கோசைட்ஸ், மாலிக் அமிலம் காணப்படுகிறது.
- இருமல், மலச்சிக்கல் போன்றவற்றை குறைக்கிறது. உடலுக்கு வலிமை தருகிறது. இரத்த அழுத்தம் மற்றும் உடலில் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.
No comments:
Post a Comment