Saturday, November 16, 2013

சேப்பங்கிழங்கு சாம்பார்

மஞ்சள் பொடிசேப்பங்கிழங்குதுவரம் பருப்பு
தேவையான பொருள்கள்:
  1. சேப்பங்கிழங்கு = கால் கிலோ
  2. துவரம் பருப்பு = 200 கிராம்
  3. மிளகாய் பொடி = ஒன்றரை ஸ்பூன்
  4. தனியா பொடி = அரை ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி = சிறிதளவு
  6. பெருங்காயம் = சிறிதளவு
  7. கடுகு = அரை ஸ்பூன்
  8. சீரகம் = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = 3 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து குழைய வேக விடவும். சேப்பங்கிழங்கை முழுதாக வேக விட்டுக் கொண்டு உரித்து துண்டு போடவும். புளியை சிறிது கெட்டியாக கரைக்கவும்.
  • புளித்தண்ணீரில் சேப்பங்கிழங்கு துண்டுகளை 10 நிமிடம் நனைத்து வைக்கவும். மிளகாய் பொடி, தனியா பொடியை பருப்போடு சேர்த்து உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும். கொதித்ததும் கிழங்கையும், புளியையும் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான சேப்பங்கிழங்கு சாம்பார் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, உப்புமா, இட்லி, பொங்கல், தோசை ஆகியவற்றோடும் பரிமாற‌லாம்.
மருத்துவ குணங்கள்:
  • சேப்பங்கிழங்கில் கார்போஹைட்ரேட், புரதம், ஃபைபர் அதிகம் உள்ளது. இவை  செரிமான பிரச்சினை மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் நீரிழிவு, குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கிறது.

No comments: