Saturday, November 16, 2013

காளான் குழம்பு

காளான்மிளகுதேங்காய் துண்டுகள்
தேவையான பொருள்கள்:
  1. காளான் = ஒரு கப்
  2. சின்ன வெங்காயம் = 10
  3. தேங்காய் துண்டுகள் = 2
  4. சீரகம் = 1ஸ்பூன்
  5. மிளகு = 3 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
  7. தனியா தூள் = 2 ஸ்பூன்
  8. கறிவேப்பிலை = தேவையான அளவு
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • காளானை சிறியதாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய்சீரகம் மற்றும் மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய காளான்சின்ன வெங்காயம்அரைத்த மசாலாதேவையான அளவு உப்புமஞ்சள் தூள்மிளகாய் தூள்தனியா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக வைக்கவும்.
  • சிறிது வெந்ததும் மூடியை திறந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகும் வரை கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி வைத்து இறக்கவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான காளான் குழம்பு தயார். இதை சாதத்தோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • காளானில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. மேலும் கார்போஹைட்ரேட்புரதம்வைட்டமின்கள்தாதுக்கள்நீர் மற்றும் ஃபைபர் காணப்படுகிறது.
  • நீரிழிவு உடையவர்கள் காளானை எடுத்து கொள்வதால் தொற்று நோய்கள்வீக்கம் போன்றவை குறைகிறது.
  • காளானில் இரும்புதாமிரம்பொட்டாசியம்செலினியம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த சோகை வராது. நகங்கள்பற்கள்எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.

No comments: