Saturday, November 16, 2013

வெங்காய வற்றல் குழம்பு

சின்ன வெங்காயம்புளிமிளகாய் வற்றல்
தேவையான பொருள்கள்:
  1. சின்ன வெங்காயம் = 150 கிராம்
  2. மிளகாய் பொடி = 2 ஸ்பூன்
  3. தனியா பொடி = 3 ஸ்பூன்
  4. மஞ்சள் பொடி = சிறிதளவு
  5. பெருங்காயப்பொடி = சிறிதளவு
  6. பச்சை மிளகாய் = 2
  7. மிளகாய் வற்றல் = 3
  8. புளி = ஒரு  எலுமிச்சை அளவு
  9. வெந்தயம் = அரை ஸ்பூன்
  10. கடுகு = அரை ஸ்பூன்
  11. எண்ணெய் = 4 ஸ்பூன்
  12. உப்பு= தேவையான அளவு
செய்முறை:
  • புளியை 2 டம்ளர் தண்ணீரில் சிறிது ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். வெங்காயத்தை உரித்து முழுதாக வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
  • கரைத்த புளியில் மிளகாய் பொடி, தனியா பொடி, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
  • எண்ணெயில் வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்து அதில் உரித்த வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி குழம்பை சேர்த்துக் கொதித்த பின் இறக்கி கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான வெங்காய வற்றல் குழம்பு தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, ஆப்பம் ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
  • வெங்காயத்தில் கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது கூறுகள் அதிகம் உள்ளது. இதனால் ஜலதோஷம், ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் மற்றும் இருமல் போன்ற நோய்கள் குறைகிறது.

No comments: