தேவையான பொருள்கள்:
- தயிர் = ஒன்றரை கப்
- மிளகாய் பொடி = 1ஸ்பூன்
- பொட்டுக்கடலை = 3 ஸ்பூன்
- சீரகப்பொடி = அரை ஸ்பூன்
- இஞ்சி = காலங்குலம்
- பூண்டு = 10 பல்
- எலுமிச்சை பழம் = 1 மூடி
- பச்சை மிளகாய் = 2
- பெருங்காயம் = சிறிதளவு
- கடுகு = அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
- எண்ணெய் = 2 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- தயிரக் கடைந்து ஒரு கப் தண்ணீர் விடவும். பொட்டுக்கடலை, இஞ்சி, உரித்த பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதையும், உப்பையும், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சீரகப்பொடி ஆகியவற்றை அரை கப் தண்ணீரில் கொதிக்க விடவும்.
- கொதித்ததும் கடைந்த தயிரை விட்டு ஒரு கொதி விடவும். இறக்கி வைத்து கொத்தமல்லி தூவி, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- கீறிய பச்சை மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
சுவையான மோர்க்குழம்பு தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, பொங்கல், அடை, நூடுல்ஸ் ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
- தயிர் ஊட்டச்சத்து மிக்கது மற்றும் கொழுப்பை குறைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. வேனிற் கட்டி குறைகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் பலம் பெறும். உயர் இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது.
No comments:
Post a Comment