தேவையான பொருள்கள்:
- பச்சை பட்டாணி = 200 கிராம்
- பச்சை மிளகாய் = 6
- தக்காளி = கால் கிலோ
- பூண்டு = 1 முழுதாக
- வெங்காயம் = 2
- தேங்காய் = 1 மூடி
- இஞ்சி = அரையங்குலம்
- முந்திரி பருப்பு = 10
- பொட்டு கடலை = 4 ஸ்பூன்
- கசகசா = 2 ஸ்பூன்
- சோம்பு = 1 ஸ்பூன்
- ஏலக்காய் = 3
- பட்டை = 2
- கிராம்பு = 3
- பிரிஞ்சி இலை = 1
- ஜாதிக்காய் பொடி = கால் ஸ்பூன்
- எண்ணெய் = 4 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- பச்சை பட்டாணியை உரித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு நீளவாட்டில் அரிந்து கொள்ளவும்.
- தேங்காய், இஞ்சி, முந்திரி பருப்பு, பொட்டு கடலை, கசகசா, சோம்பு, ஏலக்காய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பை சிறிது தட்டிக் கொள்ளவும்.
- எண்ணெயில் தட்டிய பட்டை,கிராம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரிந்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- இதனோடு பச்சை பட்டாணியையும் சேர்த்து தேவையான அளவு கொதித்ததும் உப்பும், தேவையானால் சிறிது எலுமிச்சை சாறும், ஜாதிக்காய் பொடியையும்,
- கொத்தமல்லியையும் சேர்த்து பரிமாறவும்.
சுவையான பட்டாணி குருமா தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பிரட், நூடுல்ஸ், ஆப்பம், அடை, கட்லேட், சமோசா ஆகியவற்றோடு
பரிமாறலாம்.
பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
- பச்சை பட்டாணியில் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், ஸ்டார்ச், புரதம், வைட்டமின்கள் A மற்றும் C அதிகம் காணப்படுகிறது. பச்சை பட்டாணி 100 கிராம் மட்டும் 81 கலோரி வழங்குகிறது. மேலும் இதில் கொழுப்பு சத்து இல்லை.
- எனவே இந்த பட்டாணி குருமா உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
No comments:
Post a Comment