Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Saturday, November 16, 2013

கொண்டைக்கடலை புளிக்குழம்பு

கொண்டைக்கடலைகொண்டைக்கடலை புளிக்குழம்புபுளி
தேவையான பொருள்கள்:
  1. கொண்டைக்கடலை (கருப்பு) = 1 கப்
  2. தக்காளி = 1
  3. வெங்காயம் = 1
  4. பூண்டு = 2 பல்
  5. இஞ்சி = அரை துண்டு
  6. தேங்காய் = 2 துண்டுகள்
  7. சீரகம் = 1 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் = தேவையான அளவு
  9. மல்லித்தூள் = 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
  11. புளி = சிறிய உருண்டை
  12. கடுகு = 1 ஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  14. எண்ணெய் = தேவையான அளவு
  15. உப்பு = தேவையான அளவு
  16. கறிவேப்பிலை = தேவையான அளவு
செய்முறை:
  • கொண்டைக்கடலையை இரவே ஊற வைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகத்தை விழுதாக அரைத்து கொள்ளவும். ஊற வைத்த கடலையை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு மற்றும் இஞ்சி போட்டு கிளறி வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி சிறிது வெந்ததும் தேங்காய், சீரக விழுதை

அவல் வடை

அவல்வெங்காயம்உருளைக்கிழங்கு
  1. அவல் = அரை கப்
  2. துவரம் பருப்பு = 50 கிராம்
  3. உருளைக்கிழங்கு = 3
  4. வெங்காயம் = 1
  5. பச்சை மிளகாய் = 3
  6. சீரகம் = 1ஸ்பூன்
  7. உப்பு = தேவையான அளவு
  8. எண்ணெய் = தேவையான அளவு
  9. கொத்தமல்லி இலை = சிறிதளவு
செய்முறை:
  • கெட்டி அவலாக எடுத்து 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். நன்கு ஊறியதும் நீரை வடித்து வைத்து கொள்ளவும்.
  • சுத்தமான துவரம் பருப்பை எடுத்து அரைத்து மாவாக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஊறிய அவல், அரைத்த துவரம் பருப்பு மாவு, மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • பிறகு இதனுடன் கொத்தமல்லி இலையை நறுக்கி போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி வைத்து கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு

உளுந்து போண்டா

மிளகுஉளுந்துதேங்காய்
தேவையானப் பொருள்கள்:
  1. உளுந்து – ஒரு கப்
  2. மிளகு – ஒரு டீஸ்பூன்
  3. தேங்காய் – ஒரு துண்டு (சிறு சிறு பல்லாக நறுக்கிக்கொள்ளவும்)
  4. பெருங்காயம் – துளி
  5. உப்பு – தேவையான அளவு
  6. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
  • உளுந்தை தண்ணீரில் நனைத்து ஊறவைக்க வேண்டும். உடைத்த கறுப்பு உளுந்து மட்டுமே நன்றாக மாவு போன்று இருக்கும். வெள்ளை உளுந்து பயன்படுத்தினால்  போண்டா அந்த அளவுக்கு மிருதுவாக  இருக்காது.
  • உளுந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது  ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய பிறகு தோல் இல்லாமல் கழுவ வேண்டும்.
  • பின்பு கொஞ்சம் நீரை விட்டு சிறிது நேரத்திற்கு மட்டும் குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.
  • பின்பு உளுந்தை 

உருளைக்கிழங்கு மசாலா குழம்பு

உருளைக்கிழங்குவெங்காயம்பூண்டு
தேவையானபொருள்கள்:
  1. உருளைக்கிழங்கு- கால் கிலோ,
  2. பூண்டு- 2 பல்,
  3. வெங்காயம்- 1,
  4. தக்காளி – 1,
  5. கீறிய பச்சை மிளகாய்   – 1,
  6. புளி – நெல்லிக்காய் அளவு,
  7. கடுகு – அரை ‌டீஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு – அரை ‌டீஸ்பூன்
  9. சீரகம் – அரை ‌டீஸ்பூன்
  10. மஞ்சள் – அரை ‌டீஸ்பூன்,
  11. கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
  12. குழம்பு பொடி – ஒரு டீஸ்பூன்,
  13. கறிவேப்பிலை,
  14. எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
  15. மிளகாய்த்தூள் – தேவையான அளவு,
  16. உப்பு  – தேவையான அளவு.
செய்முறை:
  • உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்க வேண்டும்.
  • சட்டியில் எண்ணெ‌யை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் சூடானதும் உளுந்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.
  • நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி,உருளைக்கிழங்கு,  ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்adecக வேண்டும்.
  • மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு  பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின்பு  புளியைக் கரைத்து ஊற்ற

சுரைக்காய் குழம்பு

சுரைக்காய்பச்சை மிளகாய்வெங்காயம்
  1. சுரைக்காய் = 1
  2. பச்சை மிளகாய் = 1
  3. வெங்காயம் = 1
  4. இஞ்சி = சிறிய துண்டு
  5. மிளகாய் தூள் = 2 ஸ்பூன்
  6. புளி = சிறிய உருண்டை
  7. தேங்காய் = 2 துண்டுகள்
  8. சீரகம் = 1 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் = சிறிதளவு
  10. மல்லித்தூள் = 2 ஸ்பூன்
  11. எண்ணெய் = தேவையான அளவு
  12. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • சுரைக்காயை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்து கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகத்தை அரைத்து கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
  • பிறகு கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளியை கரைத்து ஊற்றி மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
  • பிறகு சுரைக்காய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து

வேர்க்கடலை குழம்பு

தேங்காய்வேர்க்கடலைநறுக்கிய வெங்காயம்
  1. வேர்க்கடலை =அரை கப்,
  2. தேங்காய் = 2 துண்டுகள்,
  3. கடுகு = தலா ஒரு ‌டீஸ்பூன்,
  4. உளுத்தம் பருப்பு = ஒரு ‌டீஸ்பூன்,
  5. சீரகத்தூள் = ஒரு ‌டீஸ்பூன்,
  6. புளிக்கரைசல்,
  7. நறுக்கிய வெங்காயம் = தலா ஒரு டேபிள் ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் = ஒன்றரை டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள் = கால் டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை
  11. சமையல் எண்ணெய்
  12. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • புளிக்கரைசலை ஒரு பாத்திரத்தில்  எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள  வேண்டும்.
  • பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.
  • கொதித்ததும் வேக வைத்த வேர்க்கடலையை உள்ளே போட வேண்டும்.
  • பின்பு நன்கு கொதித்ததும் மற்றும் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு,  சீரகத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
  • பொன்னிறமாக மாறியதும் அதனை கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். இப்போது சூடான

மசால் வடைக் குழம்பு

உப்புமசால் வடைசமையல் எண்ணெய்
  1. மசால் வடை – 10
  2. வெங்காயம் – 75கிராம்
  3. பச்சை மிளகாய் – 2
  4. மல்லிப் பொடி -இரண்டு தேக்கரண்டி
  5. மிளகாய் பொடி – ஒன்றரைத் தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி – சிறிதளவு
  7. தேங்காய் துருவியது – 5 தேக்கரண்டி
  8. சோம்பு – அரைத் தேக்கரண்டி
  9. முந்திரி -5
  10.  இஞ்சி – சிறுதுண்டு
  11. சமையல் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
  12. கிராம்பு- 2
  13. மிளகு – கால் தேக்கரண்டி
  14. கறிவேப்பிலை – ஒரு தேக்கரண்டி
  15. மல்லி – ஒரு தேக்கரண்டி
  16. உப்பு – தேவையான அளவு
வடை செய்ய:
  • அரை கிலோ ஆழாக்குக் கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • நன்கு ஊறிய பிறகு நீரை சுத்தமாக வடிகட்ட வேண்டும்.
  • அதில் ஒரு தேக்கரண்டிப் பருப்பை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மீதி உள்ள கடலைப் பருப்பை உப்பு போட்டு பரபரவென்று மிக்சியில் அரைக்க வேண்டும்.
  • அரைத்த மாவுடன் தனியே எடுத்து வைத்த ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிணைய வேண்டும்.
  • பின்பு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்ட வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் காய்ந்ததும் பருப்பு உருண்டையை வடையாக செய்து எண்ணெயில் போட வேண்டும்.
  • வடையை இருபுறமும் திருப்பி விட்டு வடை நன்கு வெந்ததும்

பழ தயிர் சாதம்

ஆப்பிள்தயிர்மாதுளை
தேவையானப் பொருள்கள்:
  1. அரிசி சாதம் – அரை கப்,
  2. தயிர் – 2 கப்,
  3. பச்சை மிளகாய் – 1,
  4. கேரட்- 1,
  5. மாங்காய் – 1,
  6. மாதுளை – கால் கப்,
  7. திராட்சை – 20,
  8. ஆப்பிள் – 1,
  9. கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை:
  • பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • கேரட் மற்றும் மாங்காயை துருவிக் கொள்ள வேண்டும்.
  • ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • தயிருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை வேக வைத்த அரிசி சாதத்துடன் கலந்து வைக்க வேண்டும்.
  • பின்பு அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் நறுக்கிய பழ வகைகள் சேர்த்து நன்கு கிண்ட வேண்டும்.
  • இப்போது சூடான பழ தயிர் சாதம் தயார்.
மருத்துவக் குணங்கள்:
  • தயிரில் கால்சியம் மற்றும்  புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளது,இதில் பழ வகைகள் சேர்ப்பதால் வைட்டமின் சத்தும் நிறைந்துள்ளது.
  • இவற்றில் புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இவை ஜீரண சக்தியை அதிகம் பெற்றுள்ளது.
  • தயிர் நன்மை தரும் பாக்டீரியாக்களை

வெஜிடபுள் புலாவ்

பச்சை பட்டாணிகேரட்பாஸ்மதி அரிசி
  1. பாஸ்மதி அரிசி – 2 கப்
  2. பெரிய வெங்காயம் – 2
  3. கேரட் -2
  4. பச்சை பட்டாணி – 100 கிராம்
  5. பீன்ஸ் – 50 கிராம்
  6. காலிஃப்ளவர்- 100 கிராம்
  7. பச்சை மிளகாய் – 2
  8. இஞ்சி பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  9. பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  10. சீரகம்-அரைத் தேக்கரண்டி
  11. மல்லி
  12. புதினா தழை – சிறிதளவு
  13. பட்டை – ஒரு அங்குலம்
  14. கிராம்பு – 2
  15. ஏலக்காய் – 2
  16. பிரியாணி இலை – சிறிதளவு
  17. எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
  18. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
  • அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • வெங்காயத்தை நீளாமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • கேரட் மற்றும் பீன்சை அரைத் துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
  • காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வெந்நீரில் அலசி வைக்க வேண்டும்.
  • பட்டை கிராம்பு ஏலக்காய் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பிரிஞ்சி இலை போட்டு தாளிக்க வேண்டும்.
  • பின்பு

Friday, November 15, 2013

மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்

வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண்விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது... கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய '30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.




 ''உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க... நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க'' என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.