Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Saturday, November 16, 2013

முட்டைகோஸ் காரக்குழம்பு

தக்காளிமுட்டைக்கோஸ்வெங்காயம்
தேவையான பொருள்கள்:
  1. முட்டைகோஸ் = அரை கிலோ
  2. வெங்காயம் = 1
  3. தக்காளி = 2
  4. மஞ்சள் தூள் = சிறிதளவு
  5. மிளகாய் தூள் = 3 தேக்கரண்டி
  6. கடுகு = சிறிதளவு
  7. சீரகம் = அரை ஸ்பூன்
  8. உளுந்து = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • முட்டைகோஸை தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டடையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் உளுந்து போட்டு தாளித்து அதில் வெங்காயம் போட்டு வதக்கி வெந்ததும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • பிறகு முட்டைகோஸை போட்டு சிறிது சிறிது புளி தண்ணீர் விட்டு கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு ந‌ன்றாக கிளறி மூடி வைத்து இடையிடையே திறந்து கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து

வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய்மிளகாய்உளுத்தம் பருப்பு
தேவையான பொருட்கள்:
  1. வாழைக்காய் – 4
  2. உளுத்தம் பருப்பு- 25 கிராம்
  3. மிளகாய் – 8
  4. நெய் – 100 கிராம்
  5. பெருங்காயம் – சிறிதளவு
  6. கடலைப் பருப்பு – 50 கிராம்
  7. துருவிய தேங்காய் – 150 கிராம்
  8. வேகவைத்த துவரம் பருப்பு – சிறிதளவு
  9. உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
  • வாழைக்காய்களை கழுவி துடைத்து விட்டு எண்ணெய் தடவி நெருப்பில் போட்டு நன்றாக சுட்டு எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • வாணலியில் நெய்யை விட்டு மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • பின்னர் வாழைக்காயின் தோலை நீக்கி விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து  அதனுடன் உப்பை சோக்கவேண்டும்.
  • வறுத்து அரைத்த பொடியை பிசைந்து வைத்துள்ள வாழைக்காயுடன் சேர்க்கவேண்டும். பின்னர் துருவிய தேங்காய் துருவலையும், வேகவைத்த துவரம் பருப்பையையும் சேர்த்து நன்றாக கிளறி

ஓட்ஸ் தோசை

ஓட்ஸ்சீரகம்தயிர்
தேவையான பொருள்கள்:
  1. ஓட்ஸ் = 3 கப்
  2. தயிர் = 2 ஸ்பூன்
  3. சீரகம் = 1 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் = 3
  5. அரிசி மாவு = 2 ஸ்பூன்
  6. சோள மாவு = 2 ஸ்பூன‌
  7. வெங்காயம் = 1
  8. உப்பு = தேவையான அளவு
  9. கறிவேப்பிலை = சிறிதளவு
செய்முறை:
  • ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை போட்டு சிறிது வெந்நீர் ஊற்றி தயிரை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பிறகு பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்து இதில் அரிசி மாவு மற்றும் சோள மாவை கலந்து வைத்து கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலக்கி மெல்லியதாக தோசை போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை தயார். இதை

தானிய காய்கறி சாம்பார்

தானிய காய்கறி சாம்பார்தானிய கலவைகாய்கறி கலவை
தேவையான பொருள்கள்:
  1. தானிய கலவை = அரை கப்
  2. துவரம் பருப்பு = 1 கப்
  3. காய்கறி கலவை = 2 கப்
  4. தக்காளி = 2
  5. வெங்காயம் = 1
  6. சாம்பார் தூள் = 3 ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் = அரை ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் = சிறிதளவு
  9. புளி = சிறிய உருண்டை
  10. கடுகு = தாளிக்க தேவையான அளவு
  11. வெந்தயம் = தாளிக்க தேவையான அளவு
  12. உளுந்து = தாளிக்க தேவையான அளவு
  13. சீரகம் = தாளிக்க தேவையான அளவு
  14. கொத்தமல்லி இலை = சிறிதளவு
  15. கறிவேப்பிலை = சிறிதளவு
  16. எண்ணெய் = தேவையான அளவு
  17. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • தானியங்களை நன்றாக ஊற வைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கு கொள்ளவும்.  சாம்பாருக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்.
  • ஊற வைத்த தானியங்களுடன் துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். இவை நன்றாக வெந்ததும் அதில் நறுக்கிய காய்கறிகள், தக்காளி, வெங்காயம், சாம்பார் தூள் மற்றும் தேவையான அளவு

பாகற்காய் குழம்பு

மிதி பாகற்காய்தேங்காய் பால்தக்காளி
தேவையான பொருள்கள்:
  1. மிதி பாகற்காய் = தேவையான அளவு
  2. தேங்காய் பால் = 1 கப்
  3. தக்காளி = 2
  4. சின்ன வெங்காயம் = அரை கப்
  5. பூண்டு = 5 பல்
  6. மிளகாய் தூள் = தேவைக்கேற்ப‌
  7. மஞ்சள் தூள் = சிறிதளவு
  8. குழம்பு தூள் = 2 ஸ்பூன்
  9. புளி = சிறிய உருண்டை
  10. எண்ணெய் = தேவையான அளவு
  11. உப்பு = தேவையான அளவு
  12. கறிவேப்பிலை = தாளிக்க‌
செய்முறை:
  • பாகற்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து இரண்டாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி கொள்ளவும்.
  • பிறகு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பூண்டு போட்டு வதக்கி கறிவேப்பிலை போட்டு பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் குழம்பு தூள். மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து

காளான் குழம்பு

காளான்மிளகுதேங்காய் துண்டுகள்
தேவையான பொருள்கள்:
  1. காளான் = ஒரு கப்
  2. சின்ன வெங்காயம் = 10
  3. தேங்காய் துண்டுகள் = 2
  4. சீரகம் = 1ஸ்பூன்
  5. மிளகு = 3 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
  7. தனியா தூள் = 2 ஸ்பூன்
  8. கறிவேப்பிலை = தேவையான அளவு
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • காளானை சிறியதாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய்சீரகம் மற்றும் மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய காளான்சின்ன வெங்காயம்அரைத்த மசாலாதேவையான அளவு உப்புமஞ்சள் தூள்மிளகாய் தூள்தனியா தூள்

மீல்மேக்கர் குழம்பு

வெங்காயம்மீல்மேக்கர்தக்காளி
தேவையான பொருள்கள்:
  1. மீல்மேக்கர் = 1 கப்
  2. வெங்காயம் = 1
  3. தக்காளி = 3
  4. இஞ்சி = சிறிய துண்டு
  5. பூண்டு = 5 பல்
  6. சீரகம் = 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
  8. மிளகாய் தூள் = தேவையான அளவு
  9. கடுகு = அரை ஸ்பூன்
  10. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  11. பெருஞ்சீரகம் = 1 ஸ்பூன்
  12. தேங்காய் பால் = அரை கப்
  13. கொத்தமல்லி = சிறிதளவு
  14. கறிவேப்பிலை = சிறிதளவு
  15. எண்ணெய் = 2 ஸ்பூன்
  16. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • மீல்மேக்கரை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு 15 நிமிடம் வைத்திருந்து நன்றாக பிழிந்து எடுத்து கொள்ளவும்.
  • பிறகு கொதிக்கும் நீரில் தக்காளியை 2 நிமிடங்கள் போட்டு எடுத்து தோலுரித்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.
  • இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  • பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து  கிளறி பிறகு தக்காளி சேர்த்து கிளறவும்.
  • நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது

உருளைக்கிழங்கு போண்டா

உருளைக்கிழங்குபாசிப்பருப்புபச்சை மிளகாய்
தேவையான பொருள்கள்:
  1. உருளைக்கிழங்கு = 2
  2. பாசிப்பருப்பு = 1 கப்
  3. வெங்காயம் = 1
  4. பச்சை மிளகாய் =2
  5. இஞ்சி = சிறிய துண்டு
  6. சீரகம் = 1ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் = 1 சிட்டிகை
  8. கொத்தமல்லி இலை = சிறிதளவு
  9. எண்ணெய்  =தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • இஞ்சியை துருவி வைத்து கொள்ளவும். கொத்தமல்லி இலையை நறுக்கி கொள்ளவும்.
  • பாசிப்பருப்பை நன்றாக ஊற வைத்து கழுவி அரைத்து வைத்து கொள்ளவும்.
  • அரைத்த பாசிப்பருப்பு, மசிந்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு

வாழைப்பூ குழம்பு

வாழைப்பூசீரகம்தேங்காய் பால்
தேவையான பொருள்கள்:
  1. வாழைப்பூ = 1
  2. சின்ன வெங்காயம் = 6
  3. தேங்காய் பால் = 1 கப்
  4. சீரகம் = 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் = சிறிதளவு
  6. மிளகாய் தூள் = தேவைக்கேற்ப‌
  7. புளி = சிறிய உருண்டை
  8. எண்ணெய் = தேவையான அளவு
  9. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.
  • புளியை கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம் போட்டு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • நன்றாக கொதித்ததும் வேக வைத்த வாழைப்பூ மற்றும் தேங்காய் பால் கலந்து

அரைக்கீரை குழம்பு

பூண்டுஅரைக்கீரைபச்சை மிளகாய்
தேவையான பொருள்கள்:
  1. அரைக்கீரை = 1 கட்டு
  2. பச்சை மிளகாய் = 3
  3. பூண்டு = 5 பல்
  4. தக்காளி = 4
  5. சின்ன வெங்காயம் = 5
  6. கடுகு = அரை ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  8. சீரகம் = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • அரைக்கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • குக்கரில் கீரை, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து மத்தினால் நன்கு கடையவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கடைந்து வைத்த கீரை கலவையை போட்டு

முருங்கைக்காய் சூப்

முருங்கைக்காய்வெங்காயம்பயத்தம் பருப்பு
தேவையான பொருள்கள்:
  1. முருங்கைக்காய் = 20 கிராம்
  2. பயத்தம் பருப்பு = 25 கிராம்
  3. வெங்காயம் = 4
  4. தக்காளி = 2
  5. மிளகு = 5 கிராம்
  6. பட்டை = 1
  7. கிராம்பு = 1
  8. தேங்காய் பால் = 100 மி.லி
  9. நெய் = 1 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் முருங்கைக்காயை லேசாக வதக்கி இறக்கி தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போடவும். பருப்பு வெந்ததும் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
  • பிறகு வாணலியில் சிறிது நெய்யை விட்டு காய்ந்ததும்

மிளகாய் குழம்பு

பச்சை மிளகாய்குடை மிளகாய்தக்காளி
தேவையான பொருள்கள்:
  1. பச்சை மிளகாய் = 10
  2. குடை மிளகாய் = 2
  3. சின்ன வெங்காயம் = 12
  4. தக்காளி = 1
  5. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  6. புளி = சிறிய உருண்டை
  7. வெந்தயம் = 1 ஸ்பூன்
  8. சீரகம் = 1 ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாய்  சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.
  • பிறகு புளியை கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். மிளகாய்

பருப்பு பூரி

கோதுமை மாவுமிளகுத்தூள்பாசிப்பருப்பு
தேவையான பொருள்கள்:
  1.  கோதுமை மாவு = 250 கிராம்
  2. பாசிப்பருப்பு = 1 ஸ்பூன்
  3. கடலை பருப்பு = 1ஸ்பூன்
  4. மிளகுத்தூள் = அரை ஸ்பூன்
  5. சீரகத்தூள் = அரை ஸ்பூன்
  6. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும். இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு கலந்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
  • கோதுமை மாவை பிசைந்து பூரியாக செய்து வதக்கிய விழுதை சிறிதளவு எடுத்து வைத்து மூடி வைத்து பிறகு எண்ணெயில்